மாற்று! – அடுத்து?

2007இல் மாற்று! தொடங்கி ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டன. பெரும்பாலும் தமிழ்த் திரட்டிகளைச் சார்ந்திருந்த காலம் போய் இப்போது டுவிட்டர், பேசுபுக், கூகுள் பிளசு என வாசிப்புப் பரிந்துரைகளுக்கான களம் மாறி விட்டது. மாற்றிலேயே கூட கட்டுரைகளைப் பரிந்துரைத்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகி விட்டது. இந்நிலையில், மாற்று! இதே வடிவத்தில் தொடர்வதில் பயன் இல்லை. அடுத்த இதனை எவ்வாறு எடுத்துச் செல்லலாம் என்பதற்கான ஆலோசனைகளும் தொழில்நுட்பப் பங்களிப்பும் வரவேற்கப்படுகிறது. போதிய பங்களிப்பு இல்லா நிலையில் மாற்று! திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதும் ஒரு தெரிவு. நன்றி.

ஆங்கில இடுகைகள்

மாற்று!ல் ஆங்கில இடுகைகளையும் காட்டத் தொடங்கி உள்ளோம். பங்களிப்பாளர்கள் அனைவரும் தமிழர்கள் என்பதால், ஆங்கிலத்தில் இருந்தாலும், தமிழர்களுக்கும் ஆர்வமூட்டும், பயன்படும் ஆங்கில இடுகைகளே காட்டப்படும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

நுட்பப் போதாமைகள் காரணமாக தற்போதை ஆங்கிலம், தமிழ் இரு மொழி இடுகைகளையும் ஒரே பக்கத்தில் காட்டுகிறோம். இது இப்படியே இருக்கட்டுமா? இல்லை, ஆங்கில இடுகைகளைத் தனியே பிரித்து http://en.maatru.net போன்ற தளத்தில் இருந்து காட்டினால் நன்றாக இருக்குமா?

[polldaddy poll=”1441961″]

புதிய பங்களிப்பாளர்கள்

எங்களது அழைப்பை ஏற்று,  புதிய பங்களிப்பாளர்களாக இணைந்திருக்கும் நண்பர்கள் சுந்தர், சுந்தோசு, வினையூக்கி, சங்கர் கணேசு, வெங்கட்ரமணன், சேது, யாத்ரீகன், பாலச்சந்தர் ஆகியோரை வரவேற்கிறோம்.