நிரலாக்கப் பங்களிப்பு வேண்டி
May 13th, 2008 by ரவிசங்கர்
மாற்று! தளத்தில் இடுகைகளைப் பகிர்வது கூட்டு முயற்சியில் நடைபெறுவது போலவே தள வடிவமைப்பு, நிரலாக்க முன்னேறங்களுக்கும் கூட்டுப் பங்களிப்புகளையே சார்ந்துள்ளோம்.
மாற்று! தளத்தின் வடிவமைப்பில் கூடிய வசதிகள் இருக்கலாமே என்று நீங்கள் நினைத்தால், அதை எப்படிச் செய்வது என்று அறிவும் திறமும் ஆர்வமும் தங்களுக்கு இருந்தால் மாற்று! தளத்துக்கான உங்கள் நிரலாக்கப் பங்களிப்புகளை வரவேற்கிறோம்.
உலக அளவில் பல திற மூல வலைத்திரட்டி மென்பொருள்கள் இருந்தாலும் தமிழ் வலைப்பதிவர்கள் தேவைகள், பழக்கங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஒரு மென்பொருளைக் காண இயலவில்லை. தமிழ் வலைப்பதிவுச் சூழலில் தனி நபர், நிறுவன முயற்சிகள் சிறப்பாக இருந்தாலும் அதன் பயன்கள் பலருக்கும் சேர்வது போன்ற திறந்த மூல கூட்டு முயற்சிகள் இல்லை.
மாற்று! தளத்தின் நிரல்களை விரைவில் திறமூலமாக வெளியிட நினைத்துள்ளோம். எனவே, உங்கள் பங்களிப்புகள் மாற்று!க்கு மட்டுமல்லாமல் உங்கள் சொந்தப் பயன்பாடுக்கும் தமிழ் வலைப்பதிவர்களுக்கும் எந்த விதக் கட்டுபாடும் இன்றி கிடைக்கும் என்று உறுதியளிக்கிறோம்.
நன்றி.
