மாற்று! OPML

மாற்று! தளத்தில் விரும்பிப் பகிரப்படும் 450+ பதிவுகள் பட்டியலை http://maatru.net/opml.xml என்ற முகவரியில் இருந்து பதிவிறக்கலாம்.

இதை எப்படிப் பயன்படுத்துவது?

1. http://reader.google.com சென்று உங்கள் ஜிமெயில் கணக்கு கொண்டு புகுபதியுங்கள்.
2. settings - > import / export சென்று இந்தக் கோப்பை browse பொத்தான் உதவியுடன் பதிவேற்றுங்கள்.

இனி, இந்த 450+ பதிவுகளில் இருந்து வெளியாகும் இடுகைகள் அனைத்தையும் உங்கள் கூகுள் ரீடர் மூலம் நீங்கள் உடனுக்குடன் படிக்கலாம். இந்தப் பட்டியலில் பதிவுகள் போக தமிழ் இணைய இதழ்கள், தமிழ் இணைய செய்தி வலைவாசல்கள் செய்தியோடைகளும் உள்ளன. தமிழ், கணினி, உணவு, திரைப்படம் போன்ற பல தலைப்புகளில் துறை வாரியாக இயன்ற அளவு தொகுத்துத் தந்திருக்கிறோம்.

இவற்றில் நீங்கள் விரும்பாத பதிவுகளை settings - > subscriptions சென்று நீக்கிக் கொள்ள முடியும்.

இதன் பயன் என்ன?

மாற்று! தளத்தில் இப்பதிவுகளின் அனைத்து இடுகைகளும் பகிரப்படுவதில்லை. பங்களிப்பாளர்கள் விரும்பும் இடுகைகள் தவிர, பிற இடுகைகளை இதன் மூலம் நீங்கள் உடனுக்குடன் வாசிக்க இயலும். ஆயிரக்கணக்கில் வெளிவரும் தமிழ் வலைப்பதிவுகளில் இருந்து பல பங்களிப்பாளர்களும் விரும்பிப் படித்த பதிவுகள் பட்டியல் என்பதால் இவை உங்களுக்கும் விருப்பப் பதிவுகளாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம். மாற்று! உள்ளிட்ட எந்த வலைத்தளத்தையும் சாராமல் உங்களுக்கென்று தனிப்பட்ட விருப்பத் திரட்டியை உருவாக்கிக் கொள்ளவும் நண்பர்களுக்கு தமிழ் வலைப்பதிவுலகம் குறித்த இனிய அறிமுகம் தரவும் இந்தப் பட்டியல் உதவலாம்.

தமிழ்ப் பதிவுலகில் வெளிப்படையான செயல்பாடுகளை ஊக்குவிக்க இது போன்ற OPML கோப்புகளைத் தருவதை ஒரு முன்மாதிரியாகச் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். தொடர்ந்து இந்த பட்டியல் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

அன்புடன்,

ரவி

One Comment

  1. venkatramanan says:

    ரவி!
    http://www.chrisfinke.com/2006…..pml-style/ புண்ணியத்திலே நானே இந்த வேலையைப் பண்ணிட்டேன்.
    அந்த html http://venkatramanan.googlepages.com/Maatru_Feeds.html என்ற சுட்டியில் உள்ளது!
    ஏதோ நம்மாலான உதவி!

    அன்புடன்
    வெங்கட்ரமணன்.

Leave a Reply

Subscribe without commenting