புதிய பங்களிப்பாளர்களை வரவேற்கிறோம்
Jul 26th, 2007 by ரவிசங்கர்
எங்கள் கொள்களைகளுடன் உடன்படும் அனைவரையும் மாற்று! தளத்தில் இடுகைகளைப் பகிர்ந்து கொள்ள வரவேற்கிறோம்.
மாற்று! பங்களிப்பாளர்கள் தங்கள் விருப்ப வலைப்பதிவுகள், தளங்களை கூகுள் ரீடர் மூலம் படிக்கிறார்கள். தாங்கள் படித்ததில் விரும்பியவற்றை மாற்று! தளத்துடன் பகிர்ந்து கொள்கிறார்கள். இது முழுக்க தன்னார்வலப் பங்களிப்பு. நீங்கள் விரும்பும் நாட்களில் விரும்பிய அளவு பங்களிக்கலாம். பலருடைய விருப்பங்கள் ஓரிடத்தில் குவியும்போது தரம், சுவை, பயன் மிகுந்த இணையத் தமிழ் படைப்புகளைக் கண்டு கொள்ளலாம் என்று நாங்கள் நம்புகிறோம்.
மாற்றுக்குப் பங்களிக்க நீங்கள் வலைப்பதிவு வைத்திருக்கவோ பிரபல வலைப்பதிவராக இருக்கவோ அவசியம் இல்லை. நல்ல வாசகராக இருத்தலே போதுமானது. இலாப நோக்கற்ற இந்தக் கூட்டு முயற்சியில் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் வாசகருக்குக் கூடுதல் பயனைத் தரும். பங்களிக்க விருப்பம் உள்ளவர்கள், இது தொடர்பான கேள்விகள் உள்ளவர்கள் tamilblogs.maatru at gmail dot com என்ற முகவரிக்கு எழுதுங்கள்.
இவற்றையும் பாருங்கள்:
* நிரலாக்கப் பங்களிப்புகளை வரவேற்கிறோம்
நன்றி.

மாற்று வலைத்தளத்தில் பதிவர் பெயர் அருகே நீல வண்ண நட்சத்திரம் போடுவது எதனால்?
துறைவன், ஒரு இடுகைக்கு அடுத்து அடைப்புக்குறிக்குள் இருக்கும் எண் எத்தனை பேர் அந்த இடுகையை விரும்பிப் பகிர்ந்திருக்கிறார்கள் என்று சுட்டும். அவர்களில் எத்தனை பேர் மிகவும் விரும்பி பகிர்ந்திருக்கிறார்கள் என்பதை நட்சத்திரங்களின் எண்ணிக்கை சுட்டும். பக்கத்தின் மேலே உள்ள தாரகைகள் என்ற படத்தைச் சொடுக்கி இந்த நட்சத்திர இடுகை பட்டியலைக் காணலாம்.
நன்றி.
எனது பதிவுகள் இடம்பெற வேண்டுகிறேன்
ஜோதிபாரதி - உங்கள் பதிவைப் பற்றி அறியத்தந்ததற்கு நன்றி. உங்கள் பதிவுகளை விரும்பிப்படிக்கும் பங்களிப்பாளர்கள் எவரேனும் மாற்று! தளத்தில் பகிர்வார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்.
[...] வேண்டிக்கிறேன். (விவரங்களுக்கு, இப்பக்கத்தைப் [...]
Dear sir,please see mr.vincents http://www.maravalam.blogspot.com.it is very useful and informative.
regards
srinivas
srinivas, வின்சென்ட்டின் பதிவு குறித்த தகவலுக்கு நன்றி. ஏற்கனவே அவரது பதிவைப் படித்து விரும்பி மாற்று! தளத்தில் பகிர்ந்து வருகிறோம். நன்றி.
நண்பர் ரவி அவர்களே,mooligaivazam-kuppusamy அவர்களது பதிவை படித்துப் பார்க்கவும்.நன்றி.
தகவலுக்கு நன்றி velarasi. நிச்சயம் படித்துப் பார்க்கிறேன்.
இது எனது தளம் http://www.lightink.wordpress.com படித்து பாருங்கள். இதில் உள்ள கட்டுரையை எவ்வாறு உங்கள் தளத்தில் தெரியவைப்பது
நன்றி
shakthi, உங்கள் பதிவைப் பற்றி அறியத்தந்ததற்கு நன்றி. தமிழ்மணம், தேன்கூடு போல் மாற்று! ஒரு தானியக்கத் திரட்டி இல்லை. எனவே, உங்கள் பதிவைச் சேர்க்க விண்ணப்பிக்கத் தேவை இல்லை. மாற்று! பங்களிக்கும் நண்பர்கள் தாங்கள் படிக்கும் பதிவுகளில் இருந்து தங்களுக்குப் பிடித்த இடுகைகளை மாற்றில் சேர்க்கிறார்கள். எனவே, தொடர்ந்து வழமை போல் தாங்கள் எழுதி வந்தால் தங்கள் இடுகைகளை விரும்பிப் படிக்கும் மாற்று! பங்களிப்பாளர் எவரேனும் அதை இங்கு சேர்ப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம். உங்கள் மின்மடலுக்கும் தனிப்பட பதில் எழுதி உள்ளேன். நன்றி.
உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி
சக்தி
http://rammalar.blogspot.com
படித்து சுவைத்த கவிதை,ஹைகூ,முதலானவை இடம்
பெற்றுள்ளன. மாற்று தளத்தில் பகிர கோருகிறேன்
சுந்தரி, உங்கள் பதிவைப் பற்றி அறியத்தந்ததற்கு நன்றி. நாங்கள் பதிவர்களின் சொந்தப் படைப்புகளைத் தாங்கி வரும் இடுகைகளையே அதிகம் விரும்பிப் பகிர்கிறோம். எனவே, உங்கள் பதிவில் இருந்து அத்தகைய இடுகைகளைப் பகிர்வோம் என்று எதிர்ப்பார்க்கலாம்.
தமிழ்மணம், தேன்கூடு போல் மாற்று! ஒரு தானியக்கத் திரட்டி இல்லை. எனவே, உங்கள் பதிவைச் சேர்க்க விண்ணப்பிக்கத் தேவை இல்லை. மாற்று! பங்களிக்கும் நண்பர்கள் தாங்கள் படிக்கும் பதிவுகளில் இருந்து தங்களுக்குப் பிடித்த இடுகைகளை மாற்றில் சேர்க்கிறார்கள். எனவே, தொடர்ந்து வழமை போல் தாங்கள் எழுதி வந்தால் தங்கள் இடுகைகளை விரும்பிப் படிக்கும் மாற்று! பங்களிப்பாளர் எவரேனும் அதை இங்கு சேர்ப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்.
[...] மாற்று! முழுக்க முழுக்கத் தன்னார்வலக் கூட்டு முயற்சிப் பங்களிப்பு என்பதால் எல்லா விருப்பப் பதிவுகளின் எல்லா விருப்ப இடுகைகளையும் பகிர்வது இயலாத ஒன்று. இன்னும் கூடுதல் பங்களிப்பாளர்கள் இணைந்தால் மட்டுமே இந்நிலையை மேம்படுத்த முடியும். நீங்களும் பங்களிப்பாளராக இணைந்து எங…. [...]
நானும் உள்ளே நுழையலாமா?
இது எனது தளம் http://tamilmuham.blogspot.com/ படித்து பாருங்கள். இதில் உள்ள ஆக்கங்களை எவ்வாறு உங்கள் தளத்தில் தெரியவைப்பது?
றிசாந்தன்
நன்றி
வணக்கம் றிசாந்தன்,
மாற்று! ஒரு தானியக்கத் திரட்டி இல்லை. எனவே, உங்கள் பதிவைச் சேர்க்க விண்ணப்பிக்கத் தேவை இல்லை. மாற்று! பங்களிக்கும் நண்பர்கள் தாங்கள் படிக்கும் பதிவுகளில் இருந்து தங்களுக்குப் பிடித்த இடுகைகளை மாற்றில் சேர்க்கிறார்கள். எனவே, தொடர்ந்து வழமை போல் தாங்கள் எழுதி வந்தால் தங்கள் இடுகைகளை விரும்பிப் படிக்கும் மாற்று! பங்களிப்பாளர் எவரேனும் அதை இங்கு சேர்ப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்.
தற்போது, தங்களின் ஒரு இடுகையை இப்போது கீழ்க்கண்ட முகவரியில் சேர்த்து இருக்கிறேன்.
http://www.maatru.net/author/%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/
நன்றி
மாற்று! நண்பர்கள் சார்பா,
ரவி
http://naathaarikalappiren.blogspot.com/ இணைக்க வழி சொல்லுங்கள்
வணக்கம் நாதாரி,
மாற்று! ஒரு தானியக்கத் திரட்டி இல்லை. எனவே, உங்கள் பதிவைச் சேர்க்க விண்ணப்பிக்கத் தேவை இல்லை. மாற்று! பங்களிக்கும் நண்பர்கள் தாங்கள் படிக்கும் பதிவுகளில் இருந்து தங்களுக்குப் பிடித்த இடுகைகளை மாற்றில் சேர்க்கிறார்கள். எனவே, தொடர்ந்து வழமை போல் தாங்கள் எழுதி வந்தால் தங்கள் இடுகைகளை விரும்பிப் படிக்கும் மாற்று! பங்களிப்பாளர் எவரேனும் அதை இங்கு சேர்ப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்.
தற்போது, தங்களின் ஒரு இடுகையை இப்போது கீழ்க்கண்ட முகவரியில் சேர்த்து இருக்கிறேன்.
http://www.maatru.net/author/naathaari
நன்றி
மாற்று! நண்பர்கள் சார்பா,
ரவி
இது எனது தளம் http://geevanathy.blogspot.com படித்து பாருங்கள்.
my blogspot add. http://www.theadal-velli.blogspot.com
pl.read and send your comment
o.k.friend muthiaya vellaian
my blogspot http://www.theadal-velli.blogspot.com
pl.red and send your comments
o.k.friends
m.vellaian