மாற்று! தள வடிவமைப்பில் அண்மைய மாற்றங்கள்
May 11th, 2007 by ரவிசங்கர்
மாற்று! தள வடிவமைப்பில் அண்மையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மாற்று! தளத்தின் புதிய தோற்றத்தைக் கீழே காணலாம்.
இத்தோற்றத்தைக் காண இயலாதவர்கள் தங்கள் உலாவியின் இடைமாற்றைப் CTRL+F5 கொண்டு நீக்கிவிட்டு, பக்கத்தைத் திரும்பவும் திறந்து பார்க்கவும்.
குறிப்பிடத்தகுந்த அண்மைய மாற்றங்கள்:
- தளத்தை முதன்முறை திறக்கும்போது பக்கம் பதிவிறங்கும் வேகம் கூட்டப்பட்டுள்ளது.
- ஒரு பக்கத்தில் முன்னைக் காட்டிலும் கூடிய இடுகைகள் காட்டப்படுகின்றன.
- தாரகைப் புள்ளிகள், எத்தனை பேர் மிகவும் விரும்பிப் படித்துப் பகிர்ந்திருக்கிறார்கள் என்பதைச் சுட்டும்.
- ஒவ்வொரு இடுகையின் முன் உள்ள + - குறிகளை அழுத்தி ஓர் இடுகையின் குறிச்சொல் வகை, அதன் முதல் ஓரிரு வரிகள், இடுகையைப் பகிர்ந்த சிலரின் பெயர்கள் குறித்த விவரங்களைப் பார்க்கவும் மறைக்கவும் முடியும்.
- குறிச்சொல் வாரியாக இடுகைகளைப் பார்க்கையில் பக்கத்தின் முடிவில் உள்ள நிகழ்புத்தகக்குறி கொண்டு அந்தந்த குறிச்சொற்களுக்கான ஓடைகளை Google Reader, Bloglines போன்ற சேவைகளில் பெற்றுப் படிக்க முடியும்.
- மாற்று! தளத்துக்குப் பங்களிப்பளிப்பதற்குத் தற்போது திறந்த அழைப்பு விடுத்திருக்கிறோம். எங்கள் கொள்களைகளுடன் உடன்படும் அனைவரையும் மாற்று! தளத்தில் இடுகைகளைப் பகிர்ந்து கொள்ள வரவேற்கிறோம்.
நன்றி.
