மாற்று! தளத்தில் உங்கள் வாசிப்பனுபவத்தை எளிமையாக்க சில கூடுதல் வசதிகள் உள்ளன.
பதிவர் தேடல்
ஒரு குறிப்பிட்ட பதிவரின் இடுகை உங்களைக் கவர்ந்திருக்கிறது என்றால் அப்பதிவர் எழுதி மாற்று! தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இடுகைகள் அனைத்தையும் வரிசையாகப் பார்க்கலாம். இதற்கு தேடல்->பதிவர் பெயர் தேடலில் பதிவரின் பெயரை உள்ளிட்டுத் தேடுங்கள். இடுகையில் பதிவர் பெயர் எப்படி குறிப்பிடப்பட்டிருக்கிறதோ அப்படியே தேடுங்கள். எடுத்துக்காட்டுக்கு, தமிழ்நதி போன்று பெயர் தமிழ் எழுத்துக்களில் எழுதப்பட்டு இருந்தால் தமிழில் எழுதித் தேடுங்கள். bsubra போன்று பெயர் ஆங்கில எழுத்துக்களில் இருந்தால் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டே தேடுங்கள்.
குறுக்கு விசைகள்
குறுக்கு விசைகளைக் கொண்டு சொடுக்கியின் (mouse) உதவி இன்றியே நீங்கள் மாற்று! தளத்தைப் பார்வையிட முடியும்.
எடுத்துக்காட்டுக்கு, * குறியும் 8 என்ற எண்ணும் இணைந்துள்ள கணினி விசைப்பலகை பொத்தானை அழுத்தினால் தாரைகை இடுகைகள் மட்டும் உள்ள பக்கத்துக்குப் போகும். இது போல் உள்ள மற்ற குறுக்கு விசைகள்:
^6 – முகப்புப் பக்கம்.
.> – அடுத்த பக்கம்.
,< – முந்தைய பக்கம்.
மாற்று! ஓடைகள்
மாற்று! தளத்துக்கு வராமலேயே மாற்று! ஓடைகளை உங்கள் தனித் திரட்டிகளில் பெற்றுப் படிக்கலாம். மாற்று! ஓடைகளைப் பெற்று உங்கள் வலைப்பதிவின் பக்கப் பட்டையில் காட்சிப்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு, மாற்று! தள பக்கப் பட்டையில் உள்ள பெறுதல் என்ற தலைப்பைப் பார்க்கவும்.
Comments on this entry are closed.