புதிய பங்களிப்பாளர்களை வரவேற்கிறோம்

எங்கள் கொள்களைகளுடன் உடன்படும் அனைவரையும் மாற்று! தளத்தில் இடுகைகளைப் பகிர்ந்து கொள்ள வரவேற்கிறோம்.

மாற்று! பங்களிப்பாளர்கள் தங்கள் விருப்ப வலைப்பதிவுகள், தளங்களை கூகுள் ரீடர் மூலம் படிக்கிறார்கள். தாங்கள் படித்ததில் விரும்பியவற்றை மாற்று! தளத்துடன் பகிர்ந்து கொள்கிறார்கள். இது முழுக்க தன்னார்வலப் பங்களிப்பு. நீங்கள் விரும்பும் நாட்களில் விரும்பிய அளவு பங்களிக்கலாம். பலருடைய விருப்பங்கள் ஓரிடத்தில் குவியும்போது தரம், சுவை, பயன் மிகுந்த இணையத் தமிழ் படைப்புகளைக் கண்டு கொள்ளலாம் என்று நாங்கள் நம்புகிறோம்.

மாற்றுக்குப் பங்களிக்க நீங்கள் வலைப்பதிவு வைத்திருக்கவோ பிரபல வலைப்பதிவராக இருக்கவோ அவசியம் இல்லை. நல்ல வாசகராக இருத்தலே போதுமானது. இலாப நோக்கற்ற இந்தக் கூட்டு முயற்சியில் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் வாசகருக்குக் கூடுதல் பயனைத் தரும். பங்களிக்க விருப்பம் உள்ளவர்கள், இது தொடர்பான கேள்விகள் உள்ளவர்கள் tamilblogs.maatru at gmail dot com என்ற முகவரிக்கு எழுதுங்கள்.

இவற்றையும் பாருங்கள்:

* பங்களிப்பு வழிகாட்டி

* நிரலாக்கப் பங்களிப்புகளை வரவேற்கிறோம்

நன்றி.

48 thoughts on “புதிய பங்களிப்பாளர்களை வரவேற்கிறோம்

 1. துறைவன்

  மாற்று வலைத்தளத்தில் பதிவர் பெயர் அருகே நீல வண்ண நட்சத்திரம் போடுவது எதனால்?

 2. ரவிசங்கர் Post author

  துறைவன், ஒரு இடுகைக்கு அடுத்து அடைப்புக்குறிக்குள் இருக்கும் எண் எத்தனை பேர் அந்த இடுகையை விரும்பிப் பகிர்ந்திருக்கிறார்கள் என்று சுட்டும். அவர்களில் எத்தனை பேர் மிகவும் விரும்பி பகிர்ந்திருக்கிறார்கள் என்பதை நட்சத்திரங்களின் எண்ணிக்கை சுட்டும். பக்கத்தின் மேலே உள்ள தாரகைகள் என்ற படத்தைச் சொடுக்கி இந்த நட்சத்திர இடுகை பட்டியலைக் காணலாம்.

 3. ரவிசங்கர் Post author

  ஜோதிபாரதி – உங்கள் பதிவைப் பற்றி அறியத்தந்ததற்கு நன்றி. உங்கள் பதிவுகளை விரும்பிப்படிக்கும் பங்களிப்பாளர்கள் எவரேனும் மாற்று! தளத்தில் பகிர்வார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்.

 4. Pingback: தள மேம்பாடுகள், இன்ன பிற… | மாற்று!

 5. ரவிசங்கர் Post author

  srinivas, வின்சென்ட்டின் பதிவு குறித்த தகவலுக்கு நன்றி. ஏற்கனவே அவரது பதிவைப் படித்து விரும்பி மாற்று! தளத்தில் பகிர்ந்து வருகிறோம். நன்றி.

 6. velarasi

  நண்பர் ரவி அவர்களே,mooligaivazam-kuppusamy அவர்களது பதிவை படித்துப் பார்க்கவும்.நன்றி.

 7. shakthi

  இது எனது தளம் http://www.lightink.wordpress.com படித்து பாருங்கள். இதில் உள்ள கட்டுரையை எவ்வாறு உங்கள் தளத்தில் தெரியவைப்பது
  நன்றி

 8. ரவிசங்கர் Post author

  shakthi, உங்கள் பதிவைப் பற்றி அறியத்தந்ததற்கு நன்றி. தமிழ்மணம், தேன்கூடு போல் மாற்று! ஒரு தானியக்கத் திரட்டி இல்லை. எனவே, உங்கள் பதிவைச் சேர்க்க விண்ணப்பிக்கத் தேவை இல்லை. மாற்று! பங்களிக்கும் நண்பர்கள் தாங்கள் படிக்கும் பதிவுகளில் இருந்து தங்களுக்குப் பிடித்த இடுகைகளை மாற்றில் சேர்க்கிறார்கள். எனவே, தொடர்ந்து வழமை போல் தாங்கள் எழுதி வந்தால் தங்கள் இடுகைகளை விரும்பிப் படிக்கும் மாற்று! பங்களிப்பாளர் எவரேனும் அதை இங்கு சேர்ப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம். உங்கள் மின்மடலுக்கும் தனிப்பட பதில் எழுதி உள்ளேன். நன்றி.

 9. shakthi

  உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி
  சக்தி

 10. sundari

  http://rammalar.blogspot.com
  படித்து சுவைத்த கவிதை,ஹைகூ,முதலானவை இடம்
  பெற்றுள்ளன. மாற்று தளத்தில் பகிர கோருகிறேன்

 11. ரவிசங்கர் Post author

  சுந்தரி, உங்கள் பதிவைப் பற்றி அறியத்தந்ததற்கு நன்றி. நாங்கள் பதிவர்களின் சொந்தப் படைப்புகளைத் தாங்கி வரும் இடுகைகளையே அதிகம் விரும்பிப் பகிர்கிறோம். எனவே, உங்கள் பதிவில் இருந்து அத்தகைய இடுகைகளைப் பகிர்வோம் என்று எதிர்ப்பார்க்கலாம்.

  தமிழ்மணம், தேன்கூடு போல் மாற்று! ஒரு தானியக்கத் திரட்டி இல்லை. எனவே, உங்கள் பதிவைச் சேர்க்க விண்ணப்பிக்கத் தேவை இல்லை. மாற்று! பங்களிக்கும் நண்பர்கள் தாங்கள் படிக்கும் பதிவுகளில் இருந்து தங்களுக்குப் பிடித்த இடுகைகளை மாற்றில் சேர்க்கிறார்கள். எனவே, தொடர்ந்து வழமை போல் தாங்கள் எழுதி வந்தால் தங்கள் இடுகைகளை விரும்பிப் படிக்கும் மாற்று! பங்களிப்பாளர் எவரேனும் அதை இங்கு சேர்ப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்.

 12. Pingback: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் | மாற்று! வலைப

 13. rishanthan

  இது எனது தளம் http://tamilmuham.blogspot.com/ படித்து பாருங்கள். இதில் உள்ள ஆக்கங்களை எவ்வாறு உங்கள் தளத்தில் தெரியவைப்பது?

  றிசாந்தன்
  நன்றி

 14. ரவிசங்கர்

  வணக்கம் றிசாந்தன்,

  மாற்று! ஒரு தானியக்கத் திரட்டி இல்லை. எனவே, உங்கள் பதிவைச் சேர்க்க விண்ணப்பிக்கத் தேவை இல்லை. மாற்று! பங்களிக்கும் நண்பர்கள் தாங்கள் படிக்கும் பதிவுகளில் இருந்து தங்களுக்குப் பிடித்த இடுகைகளை மாற்றில் சேர்க்கிறார்கள். எனவே, தொடர்ந்து வழமை போல் தாங்கள் எழுதி வந்தால் தங்கள் இடுகைகளை விரும்பிப் படிக்கும் மாற்று! பங்களிப்பாளர் எவரேனும் அதை இங்கு சேர்ப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்.

  தற்போது, தங்களின் ஒரு இடுகையை இப்போது கீழ்க்கண்ட முகவரியில் சேர்த்து இருக்கிறேன்.

  http://www.maatru.net/author/%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/

  நன்றி

  மாற்று! நண்பர்கள் சார்பா,

  ரவி

 15. ரவிசங்கர்

  வணக்கம் நாதாரி,

  மாற்று! ஒரு தானியக்கத் திரட்டி இல்லை. எனவே, உங்கள் பதிவைச் சேர்க்க விண்ணப்பிக்கத் தேவை இல்லை. மாற்று! பங்களிக்கும் நண்பர்கள் தாங்கள் படிக்கும் பதிவுகளில் இருந்து தங்களுக்குப் பிடித்த இடுகைகளை மாற்றில் சேர்க்கிறார்கள். எனவே, தொடர்ந்து வழமை போல் தாங்கள் எழுதி வந்தால் தங்கள் இடுகைகளை விரும்பிப் படிக்கும் மாற்று! பங்களிப்பாளர் எவரேனும் அதை இங்கு சேர்ப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்.

  தற்போது, தங்களின் ஒரு இடுகையை இப்போது கீழ்க்கண்ட முகவரியில் சேர்த்து இருக்கிறேன்.

  http://www.maatru.net/author/naathaari

  நன்றி

  மாற்று! நண்பர்கள் சார்பா,

  ரவி

 16. ரவிசங்கர் Post author

  வணக்கம் வெள்ளையன். jeevaraj

  மாற்று! ஒரு தானியக்கத் திரட்டி இல்லை. எனவே, உங்கள் பதிவைச் சேர்க்க விண்ணப்பிக்கத் தேவை இல்லை. மாற்று! பங்களிக்கும் நண்பர்கள் தாங்கள் படிக்கும் பதிவுகளில் இருந்து தங்களுக்குப் பிடித்த இடுகைகளை மாற்றில் சேர்க்கிறார்கள். எனவே, தொடர்ந்து வழமை போல் தாங்கள் எழுதி வந்தால் தங்கள் இடுகைகளை விரும்பிப் படிக்கும் மாற்று! பங்களிப்பாளர் எவரேனும் அதை இங்கு சேர்ப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்.

  நன்றி

  மாற்று! நண்பர்கள் சார்பா,

  ரவி

 17. marie mahendran

  மாற்று வித்தியாசமான முயற்சி.
  எனது வலைபுவை இணைக்க முடியுமா?
  நன்றி.
  மகேந்திரன்

 18. ரவிசங்கர் Post author

  தமிழ், நாட்டுநடப்பு, வலைக்குள்மழை, marie mahendran

  மாற்று! ஒரு தானியக்கத் திரட்டி இல்லை. எனவே, உங்கள் பதிவைச் சேர்க்க விண்ணப்பிக்கத் தேவை இல்லை. மாற்று! பங்களிக்கும் நண்பர்கள் தாங்கள் படிக்கும் பதிவுகளில் இருந்து தங்களுக்குப் பிடித்த இடுகைகளை மாற்றில் சேர்க்கிறார்கள். எனவே, தொடர்ந்து வழமை போல் தாங்கள் எழுதி வந்தால் தங்கள் இடுகைகளை விரும்பிப் படிக்கும் மாற்று! பங்களிப்பாளர் எவரேனும் அதை இங்கு சேர்ப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்.

  நன்றி

  மாற்று! நண்பர்கள் சார்பா,

  ரவி

 19. anbumani

  தங்களின் மாற்று எண்ணத்தின் மூலம் பல புதிய நண்பர்களை பெற எனது வலைப்பூவை இணைக்க ஆவலாய் உள்ளேன்.

 20. ரவிசங்கர் Post author

  அன்புமணி,

  மாற்று! ஒரு தானியக்கத் திரட்டி இல்லை. எனவே, உங்கள் பதிவைச் சேர்க்க விண்ணப்பிக்கத் தேவை இல்லை. மாற்று! பங்களிக்கும் நண்பர்கள் தாங்கள் படிக்கும் பதிவுகளில் இருந்து தங்களுக்குப் பிடித்த இடுகைகளை மாற்றில் சேர்க்கிறார்கள். எனவே, தொடர்ந்து வழமை போல் தாங்கள் எழுதி வந்தால் தங்கள் இடுகைகளை விரும்பிப் படிக்கும் மாற்று! பங்களிப்பாளர் எவரேனும் அதை இங்கு சேர்ப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்.

  நன்றி

  மாற்று! நண்பர்கள் சார்பா,

  ரவி

 21. சந்துரு

  அய்யா,

  தங்கள் தளத்தில் என் வலைப்பூவை இணைப்பீர்களா ?

  பெயர் : ஏகலைவன்

  முகவரி : http://thaenvandu.blogspot.com/

  கனிவுடன் பரிசிலிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

  நன்றி.
  சந்துரு

  1. ரவிசங்கர் Post author

   அன்பு சந்துரு,

   மாற்று! ஒரு தானியக்கத் திரட்டி இல்லை. எனவே, உங்கள் பதிவைச் சேர்க்க விண்ணப்பிக்கத் தேவை இல்லை. மாற்று! பங்களிக்கும் நண்பர்கள் தாங்கள் படிக்கும் பதிவுகளில் இருந்து தங்களுக்குப் பிடித்த இடுகைகளை மாற்றில் சேர்க்கிறார்கள். எனவே, தொடர்ந்து வழமை போல் தாங்கள் எழுதி வந்தால் தங்கள் இடுகைகளை விரும்பிப் படிக்கும் மாற்று! பங்களிப்பாளர் எவரேனும் அதை இங்கு சேர்ப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்.

   நன்றி

   மாற்று! நண்பர்கள் சார்பா,

   ரவி

 22. malathi

  sir yenakku netla pirantha varusam date pottu jathaham parkkarathu yeppadinnu sollik kudunga sir thappa yeduthukkathinga sir

 23. Jawahar

  இந்தப் பக்கத்தில் என் வலைப்பதிவை எப்படி இணைப்பது? இணைக்க முயன்ற போது கீழ் காணும் எர்ரர் மெசேஜ் வருகிறது.

  The XML page cannot be displayed
  Cannot view XML input using XSL style sheet. Please correct the error and then click the Refresh button, or try again later.

  ——————————————————————————–

  An invalid character was found in text content. Error processing resource ‘http://blog.maatru.net/feed/’. Line 272, Positi…

  <![CDATA[கூகுள் பதிவுத் தேடல

  http://kgjawarlal.wordpress.com
  kgjawarlal@yahoo.com

 24. தேவியர் இல்லம், திருப்பூர்

  என்னை வளர்த்தவர்கள் நீங்கள்.

  இந்த புதிய இடுகை தோன்றக் காரணம் என்னுடைய வேர்ட் ப்ரஸ் பதிவு தளம் தொழில் நுட்பக் குறைவு குறித்து சுட்டிக்காட்டியதால்.

  வரவேற்பு பூங்கொத்து தேவியர் இல்லம் திருப்பூர். வளர்க நலமுடன்.

  நட்புடன்
  ஜோதி கணேசன். (ஜோதிஜி)
  தேவியர் இல்லம். திருப்பூர்.
  http://deviyar-illam.blogspot.com/

  புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்கள் தொடர்ச்சி

 25. இமாம்.கவுஸ் மொய்தீன்.

  வணக்கம்!
  தமிழோவியத்தில் வெளியான என்னுடைய ‘பந்துக்களில்லாப் பந்துகள்’ ‘நாற்பது நிலைக்க’ ‘ நாகாக்க’ ‘நாற்பது நிலைக்க’ போன்ற கவிதைகளை மாற்றில் வெளியிட்டிருக்கிறீர்கள். நன்றி! பங்களித்தோரின் பட்டியலில் என் பெயரையும் சேர்த்திருந்தால் நன்றாயிருந்திருக்கும். கவனிக்கவும்.
  அன்புடன்,
  இமாம்.

  1. ரவிசங்கர் Post author

   வணக்கம் திரு. இமாம்,

   பந்துக்களில்லாப் பந்துகள் பக்கத்தில் ஆக்கம் என்று உங்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்றே உங்கள் படைப்புகள் அனைத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

   மாற்று!க்குப் பங்களிப்போர் என்பது உங்களது படைப்புகளை யார் எங்களுக்கு அனுப்பி வைப்பவர்களைக் குறிக்கும். எனவே, அப்பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெறவில்லை.

Comments are closed.