கூகுள் திரட்டும் தமிழ்ப்பதிவுகளைக் கண்டு கொள்வது எப்படி?

கட்டற்ற தமிழ்க் கணிமை குழுவில் கூகுள் திரட்டும் தமிழ்ப் பதிவுகள் குறித்து ஒரு உரையாடல் வந்தது. அதில் கிடைத்த தகவல்:

http://www.google.com/blogsearch?as_q=.&num=100&lr=lang_ta&safe=active

என்ற முகவரிக்குப் போனால் கிட்டத்தட்ட தமிழில் எழுதப்பட்டு கூகுளால் திரட்டப்படும் அனைத்துப் பதிவுகளையும் பார்வையிடலாம். இம்முகவரிக்கு ஓடை முகவரி உண்டு என்பதால் நாம் கூகுள் ரீடர் மூலமும் இதைக் கண்காணித்து வரலாம்.

http://www.google.com/blogsearch?as_q=.&num=100&lr=lang_ta&safe=active&q=.&ie=UTF-8&scoring=d

முகவரியில் இதே முடிவுகள் தேதி வாரியாக காட்டப்படுகிறது.

தமிழ்ப்பதிவுகள் புதுப்பிக்கப்படுவதை உடனுக்குடன் அறியவும் புதிய பதிவுகளைக் கண்டு கொள்ளவும் உதவும். ஆனால், ஒரே குறை, தரம் பார்க்காமல் தமிழில் என்ன குப்பை எழுதப்பட்டிருந்தாலும் அள்ளிக் கொண்டு வரலாம்!

இது பல குறுக்கு வழிகளில் ஒன்று தான் என்று நினைக்கிறேன். இன்னும் மேம்பட்ட குறுக்கு வழிகள் இருக்கலாம் 🙂 உங்களுக்கு ஏதும் தெரிந்தால் சொல்வீங்க தானே? 🙂

அன்புடன்
ரவி

4 thoughts on “கூகுள் திரட்டும் தமிழ்ப்பதிவுகளைக் கண்டு கொள்வது எப்படி?

Comments are closed.