தள வடிவமைப்பு மாற்றங்கள், இன்ன பிற…

மாற்று! தள வடிவமைப்பில் மாற்றங்கள் செஞ்சிருக்கோம். இப்ப ஒவ்வொரு பதிவர், பகுப்பு, தலைப்புக்கும் ஒரு தனிப்பக்கம் இருக்கு. இது குறித்த உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளைப் பகிர்ந்துக்கிட்டீங்கன்னா உதவியா இருக்கும்.

அறியப்பட்ட குறை:

பகுப்புப் பக்கங்களில் அடுத்தடுத்த பக்கங்களுக்குப் போக வழி இல்லை. இதை சரி செய்யுறோம். பதிவர் பக்கங்களில் 100க்கணக்கான இடுகைகளையும் ஒரே பக்கத்தில் காட்டுறோம். இது இப்படியே இருக்கட்டுமா இல்லை அடுத்தடுத்த பக்கங்கள் பார்க்கிற மாதிரி வைக்கலாமான்னு சொல்லுங்க.

பலரும் வேண்டிய வசதிகள்:

– பக்கப்பட்டையில் பயனுள்ள தொடுப்புகள் காட்டுறது.
– தேதி வாரி உலாவல்

இவை இரண்டையும் கூடிய விரைவில் (அப்படின்னா ? 😉 ) செய்யப் பார்க்கிறோம்.. இது விசயத்தில் உங்களால் நிரலாக்கப் பங்களிப்பு அளிக்க இயலுமானாலும் வரவேற்கிறோம்.

இந்த புது முகப்பு குறித்து நிறைய வலைப்பதிவு நண்பர்களுக்கு எழுதி ஆலோசனை கேட்டு மேம்படுத்தி இருக்கோம். ஆலோசனை சொல்லி உதவிய எல்லாருக்கும் நன்றி. நாங்க கவனிக்காத சின்னச் சின்ன விசயங்களைச் சுட்டிக் காட்டி உதவி இருந்தீங்க.

அப்புறம்,

– போன பிப்ரவரி 13, 2008 மாற்று! தளம் பொதுப்பார்வைக்கு வந்து ஒரு ஆண்டு ஆச்சு.
– இப்ப தளத்தில் 10,000 க்கும் மேற்பட்ட விருப்ப இடுகைகளைச் சேர்த்திருக்கிறோம்.
– புதிய வடிவமைப்புக்கான CSS http://readburner.com தளத்தைப் பார்த்துப் பிடித்துப் போய் செய்தது. ReadBurner உருவாக்கிய Alexander Marktlக்கு நன்றி 🙂
– 800+ வலைப்பதிவர்களின் பதிவுகளை ஆவணப்படுத்தும் மாற்று! பதிவர் பட்டியல் பார்த்தீங்களா?