மாற்று! போன்ற ஆங்கிலத் தளங்கள்

பலருக்குப் பிடிக்கும் விடையங்கள் நிச்சயமாக உங்களுக்கும் பிடிக்கலாம் அல்லவா? அதுதான் மாற்று! போன்ற தளங்களின் நிதானமான வளர்ச்சிக்குக் காரணம்.

கூகிள் ரீடரின் உதவியுடன், பல ப(தி)கிர்வர்கள் ஒன்று சேர்ந்து பகிர்வதுதான் மாற்று! தளம் என்பது உங்களுக்குத் தெரியும். மாற்று! போல ஆங்கிலத்திலும் பல தளங்கள் உள்ளன. இவற்றில் குறிப்பிடத் தக்கது ReadBurner. இது அண்மையில் அதன் வடிவமைப்பாளரால் மூடப்பட்டுவிட்டது. இப்படியான முயற்சிகள் இப்போது இணையத்தில் பிரபலமடைந்து வருகின்றன.

தற்பொது மாற்று! மட்டும்தான் தமிழில் இவ்வாறான முயற்சி. இது தொடர்ந்தும் வளர்ச்சி அடைவதுடன், முதிர்ச்சியடைந்தும் வருகின்றது. பல துறைகளைச் சேர்ந்த ஆக்கங்களை துறைவாரியாகப் பார்க்க கூடியதாக உள்ளது.

ஆங்கில மொழியில் தற்போது RSSmeme கூகிள் ரீடர் மூலம் பகிரும் தளங்களில் பிரபலமாக உள்ளது. இந்த தளத்தின் நிறுவனர் கருத்து கூறுகையில் இந்தத் தளம் இணையத்தில் உலாவி கூகிள் ரீடர் கணக்குகளை அறிந்து தானே இணைக்கும் வல்லமை பெற்றது என்றார்.

இங்கு சென்று நீங்கள் 10 வாசகர்களால் பகிரப்பட்ட பதிவு அல்லது 5 வாசகர்களால் பகிரப்பட்ட பதிவு போன்ற கட்டுப்பாடுகளைக் கொடுத்து பல ஆக்கங்களை அறியலாம். ஏன் தயக்கம் பாருங்கள் பகிருங்கள்!!!

One thought on “மாற்று! போன்ற ஆங்கிலத் தளங்கள்

  1. ரவிசங்கர்

    மயூ, உங்களிடம் இருந்து இடுகையைக் காண மகிழ்ச்சி. இன்னும் சில தளங்கள்:

    http://sharedreader.dennesabing.com/
    http://apps.facebook.com/feedheads/

    http://friendfeed.com போன்ற இன்னும் சில தளங்கள் கூகுள் ரீடர் உட்பட்ட பல சேவைகளில் இருந்தும் தகவல்களை ஒருங்கிணைக்கின்றன. ஆனா, அவை “அளவுக்கு மிஞ்சிய தகவல்களைத்” தந்து அலுக்க வைக்கின்றன 🙂

Comments are closed.