அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

என் தளத்தை மாற்றில் பகிர்வீர்களா? எப்படி விண்ணப்பிப்பது?

தமிழ்மணம், தேன்கூடு போல் மாற்று! ஒரு தானியக்கத் திரட்டி இல்லை. எனவே, உங்கள் பதிவைச் சேர்க்க விண்ணப்பிக்கத் தேவை இல்லை. மாற்று! பங்களிக்கும் நண்பர்கள் தாங்கள் படிக்கும் பதிவுகளில் இருந்து தங்களுக்குப் பிடித்த இடுகைகளை மாற்றில் சேர்க்கிறார்கள். எனவே, தொடர்ந்து வழமை போல் தாங்கள் எழுதி வந்தால் தங்கள் இடுகைகளை விரும்பிப் படிக்கும் மாற்று! பங்களிப்பாளர் எவரேனும் அதை இங்கு சேர்ப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்.

ஏன் என் பதிவைப் பகிரவில்லை? ஏன் என் பதிவின் எல்லா இடுகைகளையும் பகிரவில்லை? ஏன் என் ஒரு பதிவைப் பகிர்ந்து விட்டு இன்னொரு பதிவைப் பகிரவில்லை?

உங்கள் பதிவுகளும் இடுகைகளும் மாற்று!ல் காணாமல் இருப்பதற்கான காரணங்கள்:

உங்கள் குறிப்பிட்ட பதிவும் இடுகைகளும் இது வரை மாற்று! பங்களிப்பாளர் கண்களில் படாமல் இருந்திருக்கலாம்.

மாற்று! முழுக்க முழுக்கத் தன்னார்வலப் பங்களிப்பு என்பதால் உங்கள் பதிவுகள், இடுகைகள் குறித்து அறிந்திருந்தும் பகிர இயலாமல் இருந்திருக்கலாம்.

மாற்று!ல் சில கொள்கைகளுக்கு உட்பட்டே இடுகைகளைப் பகிர்கிறோம். ஒரு வேளை உங்க்ள இடுகை இந்தக் கொள்கைகளுக்குப் பொருந்தாமல் இருந்திருக்கலாம்.

மாற்று!ல் இன்னும் நிறைய பதிவுகளில் இருந்து கூடுதல் இடுகைகளை அடிக்கடி காட்டி இற்றைப்படுத்தலாமே?

மாற்று! முழுக்க முழுக்கத் தன்னார்வலக் கூட்டு முயற்சிப் பங்களிப்பு என்பதால் எல்லா விருப்பப் பதிவுகளின் எல்லா விருப்ப இடுகைகளையும் பகிர்வது இயலாத ஒன்று. இன்னும் கூடுதல் பங்களிப்பாளர்கள் இணைந்தால் மட்டுமே இந்நிலையை மேம்படுத்த முடியும். நீங்களும் பங்களிப்பாளராக இணைந்து எங்களுக்கு உதவலாம்.

மாற்று! தளத்தின் வலப்பக்கம் வெற்றாக இருக்கிறதே? அங்கு ஏதாவது காட்டலாமே? இல்லை, விளம்பரங்கள் தரும் எண்ணமா?

இல்லை, மாற்றில் என்றுமே விளம்பரங்கள் தரும் எண்ணமில்லை. அந்த வலப்பக்கப் பட்டையில் சில வசதிகளை ஏற்படுத்தித் தர நினைத்திருக்கிறோம். என்றாவது ஒரு நாள் பார்க்கலாம் 🙂

மாற்று! தளத்தில் இன்னும் கூடிய வசதிகளைத் தரலாமே? இன்னும் சிறப்பாக வடிவமைக்கலாமே?

இடுகைகளைப் பகிர்வதற்கு மட்டுமல்ல, தள வடிவமைப்பு, நிரலாக்கத்துக்கும் கூட்டு முயற்சி பங்களிப்புகளையே சார்ந்துள்ளோம். மாற்று! தளத்தின் வடிவமைப்பில் கூடிய வசதிகள் இருக்கலாமே என்று நீங்கள் நினைத்தால், அதை எப்படிச் செய்வது என்று அறிவும் திறமும் ஆர்வமும் தங்களுக்கு இருந்தால் மாற்று! தளத்துக்கான உங்கள் நிரலாக்கப் பங்களிப்புகளை வரவேற்கிறோம்.

மாற்று! பங்களிப்பாளர்களின் இடுகைகளையும் பகிர்ந்தால் நன்றாக இருக்குமே?

எங்கள் இடுகைகளை நாங்களே பகிராமல் இருப்பது எங்கள் நடுநிலையை உறுதிப்படுத்த இயலும் என்று நம்புகிறோம். எனினும், நிறைய புதுப் புதுப் பங்களிப்பாளர்கள் இணைய இணைய அவர்களின் நிறைய நல்ல இடுகைகளைத் தவற விடுவதை உணர்கிறோம். இதைக் கருத்தில் கொண்டு, ஒரு வேளை, வருங்காலத்தில் இந்தக் கொள்கையைத் தளர்த்தினாலும் தளர்த்தலாம்.

ஏற்கனவே தமிழ் வலைப்பதிவுச் சூழலில் பல திரட்டித் தளங்கள் உள்ளனவே? இவற்றில் இருந்து மாற்று! எப்படி வேறுபடுகிறது? மாற்றின் தேவை என்ன?

பார்க்க – மாற்று! எப்படி மாற்று?

2 thoughts on “அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Comments are closed.