நிரலாக்கப் பங்களிப்பு வேண்டி

மாற்று! தளத்தில் இடுகைகளைப் பகிர்வது கூட்டு முயற்சியில் நடைபெறுவது போலவே தள வடிவமைப்பு, நிரலாக்க முன்னேறங்களுக்கும் கூட்டுப் பங்களிப்புகளையே சார்ந்துள்ளோம்.

மாற்று! தளத்தின் வடிவமைப்பில் கூடிய வசதிகள் இருக்கலாமே என்று நீங்கள் நினைத்தால், அதை எப்படிச் செய்வது என்று அறிவும் திறமும் ஆர்வமும் தங்களுக்கு இருந்தால் மாற்று! தளத்துக்கான உங்கள் நிரலாக்கப் பங்களிப்புகளை வரவேற்கிறோம்.

உலக அளவில் பல திற மூல வலைத்திரட்டி மென்பொருள்கள் இருந்தாலும் தமிழ் வலைப்பதிவர்கள் தேவைகள், பழக்கங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஒரு மென்பொருளைக் காண இயலவில்லை. தமிழ் வலைப்பதிவுச் சூழலில் தனி நபர், நிறுவன முயற்சிகள் சிறப்பாக இருந்தாலும் அதன் பயன்கள் பலருக்கும் சேர்வது போன்ற திறந்த மூல கூட்டு முயற்சிகள் இல்லை.

மாற்று! தளத்தின் நிரல்களை விரைவில் திறமூலமாக வெளியிட நினைத்துள்ளோம். எனவே, உங்கள் பங்களிப்புகள் மாற்று!க்கு மட்டுமல்லாமல் உங்கள் சொந்தப் பயன்பாடுக்கும் தமிழ் வலைப்பதிவர்களுக்கும் எந்த விதக் கட்டுபாடும் இன்றி கிடைக்கும் என்று உறுதியளிக்கிறோம்.

நன்றி.

3 thoughts on “நிரலாக்கப் பங்களிப்பு வேண்டி

 1. மணிவர்மா

  அரசியலை கூர்ந்து நோக்கல்.
  கவிதை வாசிப்பு
  மக்களுக்கான இலக்கிய பங்கெடுப்பு.

 2. மணிவர்மா

  அரசியலை கூர்ந்து நோக்கல்.
  கவிதை வாசிப்பு
  மக்களுக்கான இலக்கிய பங்கெடுப்பு.
  என் தளத்தை இணைக்க அன்புடன் வேண்டுகிறேன்.
  நன்றி
  மணிவர்மா

 3. ரவிசங்கர் Post author

  மணிவர்மா,

  மாற்று! ஒரு தானியக்கத் திரட்டி இல்லை. எனவே, உங்கள் பதிவைச் சேர்க்க விண்ணப்பிக்கத் தேவை இல்லை. மாற்று! பங்களிக்கும் நண்பர்கள் தாங்கள் படிக்கும் பதிவுகளில் இருந்து தங்களுக்குப் பிடித்த இடுகைகளை மாற்றில் சேர்க்கிறார்கள். எனவே, தொடர்ந்து வழமை போல் தாங்கள் எழுதி வந்தால் தங்கள் இடுகைகளை விரும்பிப் படிக்கும் மாற்று! பங்களிப்பாளர் எவரேனும் அதை இங்கு சேர்ப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்.

  நன்றி

  மாற்று! நண்பர்கள் சார்பா,

  ரவி

Comments are closed.