ஆங்கில இடுகைகள்

மாற்று!ல் ஆங்கில இடுகைகளையும் காட்டத் தொடங்கி உள்ளோம். பங்களிப்பாளர்கள் அனைவரும் தமிழர்கள் என்பதால், ஆங்கிலத்தில் இருந்தாலும், தமிழர்களுக்கும் ஆர்வமூட்டும், பயன்படும் ஆங்கில இடுகைகளே காட்டப்படும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

நுட்பப் போதாமைகள் காரணமாக தற்போதை ஆங்கிலம், தமிழ் இரு மொழி இடுகைகளையும் ஒரே பக்கத்தில் காட்டுகிறோம். இது இப்படியே இருக்கட்டுமா? இல்லை, ஆங்கில இடுகைகளைத் தனியே பிரித்து http://en.maatru.net போன்ற தளத்தில் இருந்து காட்டினால் நன்றாக இருக்குமா?

[polldaddy poll=”1441961″]

4 thoughts on “ஆங்கில இடுகைகள்

 1. கலை

  தமிழ் ஆங்கில இடுகைகளை தனித்தனியாக பிரித்துக் காட்டுவது நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து.

  1. ரவிசங்கர் Post author

   நன்றி, கலை. என் கருத்தும் அதே. கூடிய சீக்கிரம் இதற்கான நுட்பத்தைச் செயற்படுத்துவோம். அனைவரின்கருத்தும் அறிய இப்போது வாக்கெடுப்பும் சேர்த்திருக்கிறேன்.

  1. ஞானவெட்டியான்

   தமிழ் ஆங்கில இடுகைகளை தனித்தனியாக பிரித்துக் காட்டினால் தமிழ் தனித்தன்மையுடன் இருக்குமே! ஆங்கில இடுகைகள் எண்ணிக்கையில் குறைவாகவே இருக்கும். அதில் தேடுவதும் எளிது.

Comments are closed.