மாற்று! வலைப்பதிவு » வசதிகள்
OPML விளையாட்டு :)
மாற்று! வெளியிட்ட OPML பட்டியலை HTML அல்லது பதிவுப் பட்டியல் வடிவில் வெளியிட்டால் நல்லா இருக்குமேன்னு Venkatramanan கேட்டிருந்தார். கேட்டதோடு மட்டுமல்லாமல் Chris Finke உதவியோடு செஞ்சு காட்டி அசத்திட்டார்.
நமக்கு ஈடுபாடு உள்ள ஒன்றின் மீது பிறரும் இது போல் ஆர்வம் காட்டும் போது மகிழ்ச்சியா இருக்கு. சரி, “இனியும் தூங்குவது முறையில்லை ரவி”ன்னு நானும் இதை எப்படி முறைப்படி செய்யலாம்னு யோசிச்சு களத்துல இறங்கினேன்.  Chris Finke நிரலின் மேம்பட்ட உதவியோடு HTML மாற்று! பதிவுப்பட்டியலைப் பார்க்கலாம். இதுல வகை வாரியா பதிவுகள் பிரிக்கப்பட்டுள்ளதுடன், ஓடை முகவரி, தள முகவரி இரண்டுக்குமே இணைப்பு இருக்கு.
நல்லா தான் இருக்கு இந்த opml விளையாட்டு
அன்புடன்,
ரவி
தள மேம்பாடுகள், இன்ன பிற…
‘தளத்தில் சில நுட்ப ரீதியான மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’ அப்படின்னு officialஆ இந்தப் பதிவ தொடங்கியிருக்கலாம். ஆனா ஒரு சகஜமான தொனியிலேயே இந்தப் பதிவை எழுதலாம்ன்னு நினைச்சேன். மேலும், இந்த வலைப்பதிவை மாற்றுக்கான Twitterஆ மாற்றும் சதித் திட்டமும் இதில் அடங்கியிருக்கு. என்னைப் போலவே இதர பங்களிப்பாளர்களும் இதில் எழுதுவாங்கன்னு நம்பறேன் (கட்டாயமா எழுதணும்).
கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு முன்னாடி எனக்குத் தவறுதலா ஒரு மடல் வந்து சேர்ந்தது. தமிழ் விக்கிப்பீடியா, ‘தமிழா’,  போன்ற ‘தன்னார்வ’ அடிப்படையில் தீவிரமா இயங்கிக்கிட்டு இருந்தவங்களுக்கு மட்டுமே போயிருக்க வேண்டிய அந்த மடல், தவறுதலா ‘தன்நல’ அடிப்படையில் மட்டுமே இயங்கிக்கிட்டு இருந்த எனக்கும் வந்து சேர்ந்தது. அந்த மடல் ஆரம்பித்து வைத்த விவாதங்கள், அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், பலரது ஆர்வத்துடனான ஈடுபாடு, தொடர்ந்த செயல்பாடுகள், ஆதரவுக் கரங்கள், மதிப்பிற்குரிய ஆலோசனைகள், அப்படீன்னு ஒரு பட்டியலிடக்கூட முடியாத கோர்வையான நிகழ்வுகளால இன்னைக்கு மாற்று வலைத்தளம் வெற்றிகரமா இயங்கிக்கிட்டு இருக்கு.
தமிழில் எழுதப்படும் ஆயிரக்கணக்கான பதிவுகளில் மதப் பரப்பு, கொள்கைப் பரப்பு, மனச்சாய்வுகள் / வெறுப்புணர்வு, ஆசா பாசங்கள் / ஆபாசங்கள், சராசரிக்கும் கீழான ரசனை, அப்படின்னு குறிச்சொல் போட்டு பிரிச்சா மிஞ்சுவது சொற்பமான பதிவுகளாத்தான் இருக்கும். இந்த சொற்பமான பதிவுகளை மட்டும் ஒரு தளத்தில் தொகுத்து வழங்கினா எப்படி இருக்கும்ன்னு எழுந்த நப்பாசையின் விளைவுதான் மாற்று!. அதில் எவ்வளவு தூரம் வெற்றியடைஞ்சிருக்கோம்ன்னு தெரியல. ஆனாலும் முன் வைத்த காலைப் பின் வைப்பதில்லைன்னு நாங்க தொடர்ந்து செயல்பட்டுக்கிட்டும், அவ்வப்போது தளத்தை மேம்படுத்தி, செயல்பாட்டிலுள்ள இணைய முன்மாதிரிகளோட ஒப்பிடும் வகையில் எங்கள் தளத்தை பராமரித்து வருவதிலயும், முழு கவனத்தையும் செலுத்திக்கிட்டு இருக்கோம். இந்த முயற்சி வெற்றியடையும் என்ற அசராத நம்பிக்கை எங்களுக்கு இருக்கு.
மாற்று! பத்தி சொல்லும்போது, அதன் பங்களிப்பாளர்களை குறிப்பிடாம இருக்க முடியாது. நாங்க (நடுநிலையை உறுதி செய்தல்ங்கிற நோக்கத்தில்) கடைப்பிடிக்கற சில இறுக்கமான விதிகளால, எங்கள் படைப்புகளை இந்த தளத்தில் அறவே காட்ட முடியாத நிலை.  அப்படியிருந்தும் தளத்தைத் தொடர்ந்து இற்றைப் படுத்தி அயராமல் பங்களிக்கும் தன்னலமற்ற சக பங்களிப்பாளர்களை நினைச்சு ரொம்பவே பெருமையா இருக்கு. இது போன்ற பரவலாக்கப்பட்ட முயற்சி  மட்டும் இருந்திருக்கலைன்னா, நாங்க எடுத்துக் கொண்ட இலக்கை நோக்கி என்னைக்குமே நகர முடிந்திருக்காது. ஆகவே, இந்தத் தளத்தின் ‘brought to you by’ என்ற மரியாதை, தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி இத்தளத்திற்குப்  பங்களித்தவர்களையே சேரும். அவர்களைப் போலவே மேலும் பல பங்களிப்பாளர்களும் இணைந்து ஆர்வத்தோட பங்காற்றினா, இணையத்தமிழுக்கு ஒரு அருமையான சொத்தாக மாற்று! வளர்ச்சி பெறக்கூடிய வாய்ப்பு இருக்கு. அப்படி பங்களிக்க விரும்புவோர் உங்கள் தயக்கங்களை புறம் தள்ளி விட்டு, எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக்கிறேன். (விவரங்களுக்கு, இப்பக்கத்தைப் பார்க்கவும்)
பங்களிப்பாளர்களுக்கு அடுத்தபடியா நினைவு கூர வேண்டியவங்க – மாற்று! தளத்தைப் பற்றி பல்வேறு தளங்களிலும், சந்தர்ப்பங்களிலும் அறிமுகம் செய்து, அதை பல வாசகர்களிடம் கொண்டு போக உதவிய நலம் விரும்பிகள், இணைய நட்புகள், ஊடகவியலாளர்கள், மற்றும் எங்கள் தளத்திற்கு தங்கள் பதிவிலிருந்து இணைப்பு தந்து சிறப்பித்த முன்பின் தெரியாத பதிவர்கள். இவங்களோட ஆதரவு இருந்ததால்தான் மாற்று! பத்தி பலருக்குத் தெரியவந்திருக்கு, மற்றும் நாளுக்கு நாள் அதன் வருகையாளர்கள் எண்ணிக்கையும் அதிகரிச்சிக்கிட்டு இருக்கு. இந்த word of mouth / வாய்ச்சொல் வீரர்களுக்கு   என்னோட வந்தனங்கள்.
இறுதியா, உறுதியா நன்றி கூறப்பட வேண்டியவங்க இத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்ட படைப்புகளை உருவாக்கியவங்கதான். மேல குறிப்பிட்ட தவிர்க்கப்பட வேண்டிய படைப்புகளே இணைய வெளியை ஆக்கிரமிச்சிக்கிட்டு இருக்கும்போது, தங்களோட மாறுபட்ட படைப்புகளால மொழியை வாழவச்சிக்கிட்டு இருக்கிறவங்க இந்த படைப்பாளிகள்தான். அவர்களை இனங்காணுவதற்காகத்தான் மாற்று! ஆரம்பிக்கப்பட்டது. அவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்காங்கங்கிறதுதான் நாங்கள் மாற்றை உருவாக்கி நடத்தியதில் தெரிந்து கொண்ட உண்மை. இந்த உண்மைக்காக, சாத்தானிலிருந்து flying spaghetti monster வரை உள்ள அனைத்து தெய்வீக சக்திகளுக்கும் நன்றி    நான் தனிப்பட்ட முறையில் நன்றி கூற விரும்புவது Savior என்று நான்அழைக்க விரும்பும், ஆனால் Xavier என்ற பெயரைக் கொண்ட பதிவரை. பல உன்னதமான வாசிக்கும் கணங்களை எனக்கு வழங்கியுள்ளீர் நண்பரே!
சரி, இப்பொ சொல்ல வந்த விஷயத்துக்குப் போவோம். மாற்று! தளத்தில் சில நுட்ப ரீதீயான மேம்பாடுகளை செஞ்சிருக்கோம். குறிப்பிடும்படியான மாறுதல்கள்:
தள வடிமைப்பில் மற்றும் வண்ணங்களில் சில முன்னேற்றங்களை செய்திருக்கோம்
பதிவர் வாரியான பட்டியலைப் பெற பதிவர் தேடல் / தேர்வு வசதி, அதை போல் குறிச்சொல் தேர்வு வசதி ஆகியவற்றின் பயன்பாடு எளிதாகியிருக்குன்னு நம்பறோம்
(‘+’ குறியீட்டைச் சொடுக்கி) இடுகைகளை விரிவாக்கினா, இடுகையின் முதல் சில வரிகள் காட்டப்படுவது தெரிந்ததே. அதை சற்று (2-3 மடங்கு) நீளமாக்கியிருக்கோம். (ஒரு இடுகையைப் படிக்கலாமா வேண்டாமான்னு முடிவு செய்ய இது உதவலாம்)
இடுகைப் பட்டியலில் காட்டப்படற பதிவர் பெயரைச் சொடுக்கி, மாற்றில் பகிரப்பட்ட அவரது இதர இடுகைகளை பாக்கலாம்
இப்போதைக்கு இவ்வளவுதான். ஆனா, மேம்பாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்ன்னு உறுதியா சொல்ல முடியும். நாங்க எதிர்பார்கிறது, மேலும் பல பங்களிப்பாளர்கள் எங்களோட இணைந்து தணியாத ஆர்வத்துடன் செயல்படுவாங்கன்னு, மற்றும் நல்ல படைப்பாளிகள் தொடர்ந்து நல்லா எழுதுவாங்க, அதோட சராசரியா எழுதிக்கிட்டு இருப்பவர்களும், தீவிர எழுத்து பக்கமா நகருவாங்க என்பது. இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறினா, நிச்சயமா இணையத்தில் தமிழை வாழ வச்சிடலாம்.
மாற்று! OPML
மாற்று! தளத்தில் விரும்பிப் பகிரப்படும் 450+ பதிவுகள் பட்டியலை http://maatru.net/opml.xml என்ற முகவரியில் இருந்து பதிவிறக்கலாம்.
இதை எப்படிப் பயன்படுத்துவது?
1. http://reader.google.com சென்று உங்கள் ஜிமெயில் கணக்கு கொண்டு புகுபதியுங்கள்.
2. settings – > import / export சென்று இந்தக் கோப்பை browse பொத்தான் உதவியுடன் பதிவேற்றுங்கள்.
இனி, இந்த 450+ பதிவுகளில் இருந்து வெளியாகும் இடுகைகள் அனைத்தையும் உங்கள் கூகுள் ரீடர் மூலம் நீங்கள் உடனுக்குடன் படிக்கலாம். இந்தப் பட்டியலில் பதிவுகள் போக தமிழ் இணைய இதழ்கள், தமிழ் இணைய செய்தி வலைவாசல்கள் செய்தியோடைகளும் உள்ளன. தமிழ், கணினி, உணவு, திரைப்படம் போன்ற பல தலைப்புகளில் துறை வாரியாக இயன்ற அளவு தொகுத்துத் தந்திருக்கிறோம்.
இவற்றில் நீங்கள் விரும்பாத பதிவுகளை settings – > subscriptions சென்று நீக்கிக் கொள்ள முடியும்.
இதன் பயன் என்ன?
மாற்று! தளத்தில் இப்பதிவுகளின் அனைத்து இடுகைகளும் பகிரப்படுவதில்லை. பங்களிப்பாளர்கள் விரும்பும் இடுகைகள் தவிர, பிற இடுகைகளை இதன் மூலம் நீங்கள் உடனுக்குடன் வாசிக்க இயலும். ஆயிரக்கணக்கில் வெளிவரும் தமிழ் வலைப்பதிவுகளில் இருந்து பல பங்களிப்பாளர்களும் விரும்பிப் படித்த பதிவுகள் பட்டியல் என்பதால் இவை உங்களுக்கும் விருப்பப் பதிவுகளாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம். மாற்று! உள்ளிட்ட எந்த வலைத்தளத்தையும் சாராமல் உங்களுக்கென்று தனிப்பட்ட விருப்பத் திரட்டியை உருவாக்கிக் கொள்ளவும் நண்பர்களுக்கு தமிழ் வலைப்பதிவுலகம் குறித்த இனிய அறிமுகம் தரவும் இந்தப் பட்டியல் உதவலாம்.
தமிழ்ப் பதிவுலகில் வெளிப்படையான செயல்பாடுகளை ஊக்குவிக்க இது போன்ற OPML கோப்புகளைத் தருவதை ஒரு முன்மாதிரியாகச் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். தொடர்ந்து இந்த பட்டியல் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கலாம்.
அன்புடன்,
ரவி
மாற்று! தள வடிவமைப்பில் அண்மைய மாற்றங்கள்
மாற்று! தள வடிவமைப்பில் அண்மையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மாற்று! தளத்தின் புதிய தோற்றத்தைக் கீழே காணலாம்.
இத்தோற்றத்தைக் காண இயலாதவர்கள் தங்கள் உலாவியின் இடைமாற்றைப் CTRL+F5 கொண்டு நீக்கிவிட்டு, பக்கத்தைத் திரும்பவும் திறந்து பார்க்கவும்.
குறிப்பிடத்தகுந்த அண்மைய மாற்றங்கள்:
- தளத்தை முதன்முறை திறக்கும்போது பக்கம் பதிவிறங்கும் வேகம் கூட்டப்பட்டுள்ளது.
- ஒரு பக்கத்தில் முன்னைக் காட்டிலும் கூடிய இடுகைகள் காட்டப்படுகின்றன.
- தாரகைப் புள்ளிகள், எத்தனை பேர் மிகவும் விரும்பிப் படித்துப் பகிர்ந்திருக்கிறார்கள் என்பதைச் சுட்டும்.
- ஒவ்வொரு இடுகையின் முன் உள்ள + – குறிகளை அழுத்தி ஓர் இடுகையின் குறிச்சொல் வகை, அதன் முதல் ஓரிரு வரிகள், இடுகையைப் பகிர்ந்த சிலரின் பெயர்கள் குறித்த விவரங்களைப் பார்க்கவும் மறைக்கவும் முடியும்.
- குறிச்சொல் வாரியாக இடுகைகளைப் பார்க்கையில் பக்கத்தின் முடிவில் உள்ள நிகழ்புத்தகக்குறி கொண்டு அந்தந்த குறிச்சொற்களுக்கான ஓடைகளை Google Reader, Bloglines போன்ற சேவைகளில் பெற்றுப் படிக்க முடியும்.
- மாற்று! தளத்துக்குப் பங்களிப்பளிப்பதற்குத் தற்போது திறந்த அழைப்பு விடுத்திருக்கிறோம். எங்கள் கொள்களைகளுடன் உடன்படும் அனைவரையும் மாற்று! தளத்தில் இடுகைகளைப் பகிர்ந்து கொள்ள வரவேற்கிறோம்.
நன்றி.
மாற்று! – சிறப்பு வசதிகள்
மாற்று! தளத்தில் உங்கள் வாசிப்பனுபவத்தை எளிமையாக்க சில கூடுதல் வசதிகள் உள்ளன.
பதிவர் தேடல்
ஒரு குறிப்பிட்ட பதிவரின் இடுகை உங்களைக் கவர்ந்திருக்கிறது என்றால் அப்பதிவர் எழுதி மாற்று! தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இடுகைகள் அனைத்தையும் வரிசையாகப் பார்க்கலாம். இதற்கு தேடல்->பதிவர் பெயர் தேடலில் பதிவரின் பெயரை உள்ளிட்டுத் தேடுங்கள். இடுகையில் பதிவர் பெயர் எப்படி குறிப்பிடப்பட்டிருக்கிறதோ அப்படியே தேடுங்கள். எடுத்துக்காட்டுக்கு, தமிழ்நதி போன்று பெயர் தமிழ் எழுத்துக்களில் எழுதப்பட்டு இருந்தால் தமிழில் எழுதித் தேடுங்கள். bsubra போன்று பெயர் ஆங்கில எழுத்துக்களில் இருந்தால் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டே தேடுங்கள்.
குறுக்கு விசைகள்
குறுக்கு விசைகளைக் கொண்டு சொடுக்கியின் (mouse) உதவி இன்றியே நீங்கள் மாற்று! தளத்தைப் பார்வையிட முடியும்.
எடுத்துக்காட்டுக்கு, * குறியும் 8 என்ற எண்ணும் இணைந்துள்ள கணினி விசைப்பலகை பொத்தானை அழுத்தினால் தாரைகை இடுகைகள் மட்டும் உள்ள பக்கத்துக்குப் போகும். இது போல் உள்ள மற்ற குறுக்கு விசைகள்:
^6 – முகப்புப் பக்கம்.
.> – அடுத்த பக்கம்.
மாற்று! ஓடைகள்
மாற்று! தளத்துக்கு வராமலேயே மாற்று! ஓடைகளை உங்கள் தனித் திரட்டிகளில் பெற்றுப் படிக்கலாம். மாற்று! ஓடைகளைப் பெற்று உங்கள் வலைப்பதிவின் பக்கப் பட்டையில் காட்சிப்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு, மாற்று! தள பக்கப் பட்டையில் உள்ள பெறுதல் என்ற தலைப்பைப் பார்க்கவும்.
மாற்று! வாசகர் குழுமம்
மாற்று! வாசகர் குழுமத்தில் இணைந்து மாற்று! வாசகர்களைக் குறித்து அறியலாம்.
மாற்று! தளப் பயன்பாடு குறித்த ஐயங்கள், கருத்துகள், விருப்பங்களைத் தெரிவிக்க மாற்று! பயனர் குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது.